சூலம் & பரிகாரம்
சூலம் – அந்தக் கிழமையில் பயணம் தொடங்கத் தவிர்க்க வேண்டிய திசை. அவசியம் என்றால் பரிகாரம் எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்.
| கிழமை | சூலம் (திசை) | பரிகாரம் |
|---|---|---|
| ஞாயிறு | மேற்கு | வெல்லம் |
| திங்கள் | கிழக்கு | தயிர் |
| செவ்வாய் | வடக்கு | பால் |
| புதன் | வடக்கு | பால் |
| வியாழன் | தெற்கு | தைலம் |
| வெள்ளி | மேற்கு | வெல்லம் |
| சனி | கிழக்கு | தயிர் |
பரிகாரம் செய்வது எப்படி
சூலத் திசையில் புறப்படும் முன், பரிகாரப் பொருளைச் சிறிது எடுத்துக்கொள்ளுங்கள்: வெல்லம், தயிர் அல்லது பால்; வியாழக்கிழமை தைலம். பிறகு பயணத்தைத் தொடங்குங்கள்.